close
Choose your channels

சூரியின் வீட்டுக்கு திரண்டு திரையுலகம்!  ஏன் தெரியுமா?

Monday, May 14, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கோலிவுட் திரையுலகில் காமெடி நடிகர்களில் முன்னணி நடிகராக இருக்கும் சூரி, தற்போதைய முன்னணி ஹீரோக்கள் மற்றும் இயக்குனர்களின் படங்களில் நடித்து பிசியாக உள்ளார். அவர்களுடைய படங்களில் நடிப்பது மட்டுமின்றி இளம் ஹீரோக்கள் மற்றும் இயக்குனர்களுடன் நல்ல நட்புறவையும் வளர்த்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று சூரியின் மதுரை வீட்டில் அவருடைய மகள் மற்றும் மகனுக்கு முடியெடுத்து காது குத்தும் வைபவம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கோலிவுட் திரையுலகின் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.

நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நேற்று முன் தினமே நடிகர் சிவகார்த்திகேயன், விக்ராந்த், இயக்குனர்கள் சுசீந்திரன், பொன்ராம் உள்ளிட்ட பலர் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். ஒரு காமெடி நடிகரின் குடும்ப விசேஷத்திற்கு முன்னணி நடிகர்கள், இயக்குனர்கள் கலந்து கொண்டது அவர்களுக்கு இடையில் உள்ள நட்பின் ஆழத்தை வெளிப்படுத்துவதாக கருதப்படுகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.