close
Choose your channels

தனுஷ் நாயகியின் திருமண தேதி: அதிகாரபூர்வ அறிவிப்பு

Thursday, May 3, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ் நடித்த முதல் பாலிவுட் படமான 'ராஜண்ணா' படத்தின் நாயகியும், பிரபல பாலிவுட் நடிகர் அனில்கபூரின் மகளுமான சோனம்கபூரின் திருமண தேதி அதிகாரபூர்வமாக கபூர் குடும்பத்தினர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது. 

நடிகை சோனம்கபூருக்கும் ஆனந்த் என்பவருக்கும் மே மாதம் 8ஆம் தேதி திருமணம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி இவர்களது திருமண பத்திரிகையின் புகைப்படமும் இணையதளங்களில் வைரலாகியுள்ளது.

மும்பையில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடைபெறவுள்ள இந்த திருமணத்திற்கு பாலிவுட் பிரபலங்கள் பெரும்பாலானோர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் வெளியான அக்சயகுமாரின் 'பேட்மேன்' (Pad man) படத்தில் நடித்த சோனம்கபூர், தற்போது நான்கு படங்களில் நடித்து வருகிறார். திருமணத்திற்கு பின்னரும் சோனம்கபூர் தனது நடிப்பை தொடர்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.