close
Choose your channels

'தலைவர் 168' படத்தில் இணைந்த பிரபல காமெடி நடிகர்!

Thursday, November 28, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகவிருக்கும் ‘தலைவர் 168’ படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பரில் பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. இந்த நிலையில் இந்த படத்தில் நடிக்கும் நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

இந்த நிலையில் இந்த படத்தில் தற்போது நடிகர் சூரி இணைந்துள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. ரஜினி படத்தில் சூரி முதல்முறையாக நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக கடந்த 90களில் அவருக்கு ஜோடியாக நடித்த பிரபல நடிகை ஒருவர் நடிக்கவிருப்பதாகவும், ரஜினியின் மகளாக கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளதாகவும் இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது

இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கவுள்ளார். ரஜினி படத்திற்கு இமான் இசையமைப்பதும் இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.