close
Choose your channels

ஸ்ரீரெட்டியின் தமிழ் லீக்ஸ்' ஆரம்பம்: முதல் பலியான முன்னணி ஹீரோ

Thursday, July 12, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த சில மாதங்களாக தெலுங்கு திரையுலகில் ஸ்ரீரெட்டியின் ஸ்ரீலீக்ஸ் புயல் போல் வீசிக்கொண்டிருந்த நிலையில் தற்போது அந்த புயல் கோலிவுட் திரையுலகை நோக்கி திரும்பியுள்ளது.

நேற்று ஸ்ரீரெட்டி தனது முகநூலில் இயக்குனர் ஒருவர் குறித்து சர்ச்சைக்குரிய பதிவு ஒன்றை தெரிவித்திருந்த நிலையில் இன்று 'ஏப்ரல் மாதத்தில்', ''நண்பன்' உள்பட பல வெற்றி படங்களில் நடித்த நடிகர் ஸ்ரீகாந்த் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை பதிவு செய்துள்ளார்.

தமிழ் திரையுலகம் மீது தான் மிகுந்த மரியாதை வைத்திருப்பதாக சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறிய ஸ்ரீரெட்டி தற்போது வெறும் பரபரப்பிற்காகவும், விளம்பரத்திற்காகவும் எந்தவித ஆதாரமும் இல்லாத குற்றச்சாட்டை கோலிவுட் திரையுலகினர் மீது சுமத்தி வருகிறார்.

கோலிவுட் திரையுலகினர் இதுகுறித்து ஆரம்பத்திலேயே சுதாரித்து கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என்று கருதப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.