close
Choose your channels

ரஜினியின் 'ஜெயிலர்' படத்தில் இணைந்த விக்னேஷ் சிவன்.. செம்ம வீடியோ வைரல்..!

Saturday, August 5, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’ஜெயிலர்’ திரைப்படம் வரும் 10ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகளை சன் பிக்சர்ஸ் நிறுவனம் விறுவிறுப்பாக பார்த்து வருகிறது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் சற்று முன் இந்த படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலின் லிரிக் வீடியோவை சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.

அனிருத் கம்போஸ் செய்த இந்த பாடலை விக்னேஷ் சிவன் எழுதி உள்ளார் என்பதும் விஷால் மிஷ்ரா இந்த பாடலை பாடியுள்ளார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து ’ஜெயிலர்’ படத்தில் விக்னேஷ் சிவன் இணைந்துள்ளார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

செம்ம மெலோடியாக கம்போஸ் செய்யப்பட்டுள்ள இந்த பாடல் முதல் முறை கேட்கும்போதே அசத்தலாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ரஜினிகாந்த் தனது மகனை எண்ணி பாடுவதாக அமைந்துள்ள இந்த பாடலின் முதல் சில வரிகள் இதோ:

என் முகம் கொண்ட என்னுயிரே
என் பெயருக்காக பிறந்தவனே
என் குணம் கொண்ட என் உலகே
எவனையும் தாண்டி சிறந்தவனே

எனக்கு பின் என்னை தொடர்பவன் நீயே
நான் நம்பத்தகுந்த நல்லவன் நீயே
புதல்வா புதல்வா வா புதல்வா புதல்வா வா

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.