close
Choose your channels

நயன்தாரா படத்தை பார்த்து பாராட்டினாரா ரஜினிகாந்த்?

Tuesday, December 21, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் படத்தை பார்த்து மிரண்டு போய் அந்த படத்தின் குழுவினர்களை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் பாராட்டி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் உருவாகிய திரைப்படம் ’ராக்கி’. இந்த படத்தின் புரமோஷன் வீடியோவுக்காக நயன்தாரா நடித்து இருந்தார் என்பதும் இந்த புரமோஷன் வீடியோ நேற்று வெளியாகி மிகப்பெரிய அளவில் வைரல் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த படம் இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தை ரஜினிகாந்த் பார்த்ததாகவும் அவர் இந்த படத்தை பார்த்து மிரண்டு போய் படக்குழுவினர் அனைவருக்கும் தனது பாராட்டுக்களை தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக பாரதிராஜா தனது முழுமையான நடிப்பை இந்த படத்தில் வெளிப்படுத்தி உள்ளார் என்று அவரை ரஜினிகாந்த் பாராட்டிஉள்ளதாக கூறப்படுகிறது. ரஜினிகாந்த் பாராட்டிய ராக்கி திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் சூப்பர் ஹிட்டாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.