close
Choose your channels

சூர்யாவின் 'தானா சேர்ந்த கூட்டம்' தெலுங்கு டைட்டில்

Saturday, November 25, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யாவின் திரைப்படங்கள் பொதுவாக தமிழை போலவே தெலுங்கிலும் சூப்பர் ஹிட் ஆகும் என்பது தெரிந்ததே. அவர் நடித்த சிங்கம் படங்களின் மூன்று பாகங்களும் தெலுங்கில் நல்ல ஹிட். இந்த நிலையில் தற்போது அவர் நடித்து வரும் 'தானா சேர்ந்த கூட்டம்' படமும் தமிழை போலவே தெலுங்கிலும் வரும் பொங்கல் தினத்தில் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தின் தெலுங்கு டைட்டில் 'கேங்' (Gang) என்று முடிவு செய்யப்பட்டிருப்பதாகவும் மிக விரைவில் தெலுங்கில் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் வெளிவரும் என்றும் செய்திகள் வெளிவந்துள்ளது. சூர்யா மட்டுமின்றி கீர்த்தி சுரேஷ் ,ரம்யா கிருஷ்ணன் ஆகியோர்களும் தெலுங்கு மாநிலங்களில் பிரபலம் என்பதால் இந்த படம் தெலுங்கில் சூப்பர் ஹிட் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

'கேங்' படத்தை UV கிரியேஷன்ஸ் நிறுவனம் தெலுங்கு மாநிலங்களில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த தகவல் உறுதி செய்யப்பட்டால் இந்நிறுவனம் வெளியிடும் முதல் டப்பிங் படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.