close
Choose your channels

ஹாலந்து செல்கிறது சூர்யா படக்குழு

Wednesday, September 2, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

'மாஸ்' படத்திற்கு பின்னர் சூர்யா, வித்தியாசமான மூன்று வேடங்களில் நடித்து வரும் '24' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக மும்பையில் நடைபெற்று வருகிறது. சூர்யாவுக்கு ஜோடியாக சமந்தா நடித்து வரும் இந்த படத்தை விக்ரம் குமார் இயக்கி வருகிறார். சைக்காலஜிக்கல் த்ரில்லர் படமாக உருவாகி வரும் இந்த படம் தற்போது 70%வரை முடிந்துவிட்டதாகவும், மீதி படப்பிடிப்பையும் விறுவிறுப்பாக முடிக்க படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.


இந்நிலையில் இன்னும் சில நாட்கள் மட்டும் மும்பையில் படப்பிடிப்பு நடத்தவுள்ள '24' படக்குழுவினர் அதன்பின்னர் ஹாலந்து நாட்டில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளனர். ஹாலந்தில் ஒரு பாடல் காட்சியும் மற்றும் ஒருசில முக்கிய காட்சிகளும் படப்பிடிப்பு நடைபெறும் என தெரிகிறது.

சூர்யாவின் 2D எண்டர்டெயின்மெண்ட் தயாரித்து வரும் இந்த படத்தில் சூர்யா, சமந்தாவுடன் நித்யாமேனன், அஜய், சத்யன், சரண்யா பொன்வண்ணன், மோகன் ராமன் மற்றும் பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கின்றார். கிரண் தியோஹன்ஸ் மற்றும் திரு ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திர்கு பிரவீண் புடி படத்தொகுப்பு செய்கிறார். வரும் தீபாவளிக்கு இந்த படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.