close
Choose your channels

ரஜினி, விக்ரம் பாணியில் செல்லும் சூர்யாவின் 'S3'

Sunday, February 28, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யா நடித்துள்ள '24' படத்தின் டீசர் வரும் மார்ச் முதல் வாரத்தில் வெளியாகும் என்றும் அவரே 'தோழா' இசை வெளியீட்டில் உறுதிப்படுத்தியுள்ள நிலையில் அதே மார்ச் முதல் வாரம் அதாவது மார்ச் 7ஆம் தேதி முதல் 'S3' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு ஆரம்பமாகவுள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே விசாகப்பட்டிணம், திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு மலேசியாவில் நடைபெறவுள்ளது. சுமார் 20 நாட்கள் நடைபெறும் இந்த படப்பிடிப்பில் சண்டைக்காட்சிகள் மற்றும் ரேஸிங் காட்சிகள் ஆகியவை படமாக்கப்படும் என தெரிகிறது.

சமீபத்தில்தான் ரஜினியின் 'கபாலி', விக்ரமின் 'இருமுகன்' ஆகிய படங்களின் படப்பிடிப்புகள் மலேசியாவில் முடிவடைந்த நிலையில் தற்போது சூர்யாவின் படமும் மலேசியாவில் படமாக்க்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சூர்யா, அனுஷ்கா, ஸ்ருதிஹாசன் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்து வருகிறார். இந்த படத்திற்காக தாமரை எழுதிய பாடல் ஒன்று சமீபத்தில் ஒலிப்பதிவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.