close
Choose your channels

சூர்யாவின் 'கங்குவா' படத்தின் சூப்பர் அப்டேட்.. வைரல் புகைப்படம்.!

Saturday, September 2, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யா நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது என்பதை பார்த்தோம். குறிப்பாக கொடைக்கானலில் பிளாஷ்பேக் காட்சிகளின் படப்பிடிப்பு பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக இந்த படத்தின் படப்பிடிப்பு ஆந்திராவில் உள்ள ராஜமுந்திரி என்ற பகுதியில் படமாக்கப்பட்ட தாகவும், இதில் அதிரடி ஆக்சன் காட்சிகள் படமாக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. அதுமட்டுமின்றி சூர்யா மற்றும் பிரபல பாலிவுட் நடிகர் பாபி தியோல் சம்பந்தப்பட்ட காட்சிகளும் படமாக்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது ராஜமுந்திரி படப்பிடிப்பு நிறைவு பெற்றதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதனை அடுத்து படக்குழுவினர் அனைவரும் இணைந்து எடுத்த குரூப் புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இந்த நிலையில் ‘கங்குவா’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னை மற்றும் பாங்காக் ஆகிய பகுதிகளில் நடைபெற இருப்பதாகவும் இந்த ஆண்டுக்குள் படபிடிப்பை முழுமையாக முடிக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

சூர்யா ஜோடியாக திஷா பதானி நடிக்கும் இந்த படத்தில் யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்தராஜ், ஜெகபதி பாபு, நடராஜன் சுப்பிரமணியம், பாபி தியோல் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். ரூ.350 கோடி பட்ஜெட்டில் உருவாகி வருவதாக கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.