close
Choose your channels

விவாகரத்துக்கு பின்னரும் வாழ்த்து தெரிவித்த பிரபல நடிகரின் முன்னாள் மனைவி!

Monday, January 10, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விவாகரத்துக்கு பின்னரும் பிரபல நடிகரின் முன்னாள் மனைவி தனது முன்னாள் கணவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ள தகவல் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாலிவுட் திரையுலகின் பிரபல நடிகர் ஹிருத்திக் ரோஷன் என்பதும் அவர் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார் என்பதும் தெரிந்ததே. மேலும் அவர் நடித்து வரும் ’விக்ரம் வேதா’ படத்தின் ஹிந்தி ரீமேக்கின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் இன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக ஹிருத்திக் ரோஷனின் மனைவி சூசன் கான் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் விவாகரத்து செய்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தனது முன்னாள் கணவர் ஹிருத்திக் ரோஷனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறிய சூசன்கான், ‘நீங்கள் ஒரு நல்ல அப்பா என்றும், உங்களை அப்பாவாக பெற்ற நமது குழந்தைகள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள் என்றும் உங்கள் அனைத்து கனவுகளும் நிஜமாக வேண்டும் என்று நான் வாழ்த்துகிறேன் என்றும் உங்களுக்கு எப்போதும் எனது ஆதரவு உண்டு என்றும் அவர் பதிவு செய்துள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.