close
Choose your channels

சுசீந்திரன் - விஷ்ணு படத்தில் மீண்டும் இணையும் பிரபல நடிகை

Tuesday, July 12, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் சுசீந்திரன் கடந்த ஆண்டு வெளியான விஷாலின் 'பாயும் புலி' படத்தை அடுத்து உதயநிதி ஸ்டாலின் நடிக்கவுள்ள படத்தை இயக்குவதாக இருந்தார். ஆனால் அந்த படம் சிலகாலம் தள்ளி வைக்கப்பட்டதால் தற்போது ஜீவா நடிப்பில் ஒரு படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் 15ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. சுசீந்திரன் - விஷ்ணு இணையும் 3வது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்த படத்தில் விஷ்ணுவுக்கு ஜோடியாக சிம்புவின் 'அச்சம் என்பது மடமையடா' நாயகி மஞ்சிமா மோகன் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்தது. ஆனால் தற்போது கிடைத்திருக்கும் புதிய தகவலின்படி இந்த படத்தில் விஷ்ணுவுக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடிக்கவுள்ளார் என்பதை படக்குழு உறுதி செய்துள்ளது. ஏற்கனவே இந்த ஜோடி இதே சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான 'ஜீவா' படத்தில் நடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த படத்தின் ஒரு முக்கிய கேரக்டரில் பார்த்திபன் நடிக்கவுள்ளார். இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கவுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.