close
Choose your channels

சுசீந்திரன் -விஷ்ணு படத்தின் வித்தியாசமான டைட்டில்

Friday, July 15, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் சுசீந்திரன் இயக்கவுள்ள அடுத்த படத்தின் படப்பிடிப்பு இன்றுமுதல் தொடங்கியுள்ள நிலையில் இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக்கை இன்று நடிகர் விஷால் வெளியிடவுள்ளார் என்று வெளியான செய்தியினை ஏற்கனவே பார்த்தோம்.
இந்நிலையில் இந்த படத்தின் டைட்டில் 'மாவீரன் கிட்டு' என சற்று முன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் டைட்டிலில் இருந்தே இதுவொரு பீரியட் படம் என்பதை குறிப்பதாக தெரிகிறது. எனினும் படக்குழுவினர்களிடம் இருந்து இதுகுறித்த அறிவிப்பு வரும் வரை பொறுமை காப்போம்.
விஷ்ணு, ஸ்ரீதிவ்யா, பார்த்திபன், சூரி உள்பட பலர் நடிக்கவுள்ள இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கின்றார். ஏ.ஆர்.சூர்யா ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு காசி விஸ்வநாதன் படத்தொகுப்பும், அனல் அரசு ஸ்டண்ட் இயக்குனராகவும் பணிபுரிகின்றனர். நல்லுசாமி பிக்சர்ஸ் மற்றும் ஆசியன் சினி கம்பைன்ஸ் நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தை தயாரிக்கின்றான்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.