close
Choose your channels

சிவாஜி, ரஜினி, கமலுடன் நடித்த நடிகர் மாரடைப்பால் மரணம்: திரையுலகினர் இரங்கல்!

Saturday, April 23, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்பட பல பிரபல நடிகர்களுடன் நடித்த நடிகர் சக்கரவர்த்தி காலமானார், அவருக்கு வயது 62.

சிவாஜி கணேசன் நடித்த ‘ரிஷிமூலம்’ உள்பட பல திரைப்படங்களில் நடித்துள்ள நடிகர் சக்கரவர்த்தி, மோகன் நடித்த ’உதயகீதம்’ என்ற படத்தில் சிறைக்கைதி வேடத்தில் நடித்து மனதை கவர்ந்தவர்.

தமிழில் பல்வேறு குணச்சித்திர கேரக்டரில் நடித்த இவர் கடந்த சில ஆண்டுகளாக சினிமாவில் இருந்து விலகி மும்பையில் தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு விளையாட்டுகளுக்கு பின்னர் குரல் கொடுத்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று இரவு நடிகர் சக்கரவர்த்தி தூங்கிக் கொண்டிருக்கும்போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாகவும் இதன் காரணமாக அவர் காலமானதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மறைந்த நடிகர் சக்கரவர்த்திக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.