close
Choose your channels

ரஜினியின் காலில் விழுந்து ஆசி பெற்ற பிரபல இயக்குனர்: வைரல் புகைப்படங்கள்

Friday, July 15, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் காலில் விழுந்து பிரபல நடிகர் மற்றும் இயக்குனர் ஆசி பெற்ற புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாக வருகின்றன.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், பி வாசு இயக்கத்தில், சிவாஜி புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான திரைப்படம் ’சந்திரமுகி’. இந்தப் படம் தமிழ் திரையுலக வரலாற்றில் மிகப்பெரிய சாதனை செய்த படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் இரண்டாம் பாகம் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில் இதில் ராகவா லாரன்ஸ் முக்கிய வேடத்தில் நடிக்கவிருக்கிறார். இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது தொடங்க உள்ளதை அடுத்து ’சந்திரமுகி’ படத்தின் முதல் பாகத்தில் நடித்த ரஜினிகாந்தை நேரில் சந்தித்த ராகவா லாரன்ஸ் அவரது காலில் விழுந்து ஆசி பெற்றுள்ளார். இது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

‘சந்திரமுகி 2’ படத்தை முதல் பாகத்தை இயக்கிய பி வாசு இயக்க உள்ளார் என்பதும் கீரவாணி இசையில் அமையவிருக்கும் இந்த படத்தில் முதல் பாகத்தில் நடித்த வைகைப்புயல் வடிவேலு முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆர் டி ராஜசேகர் ஒளிப்பதிவில் தோட்டா தரணி இயக்கத்தில் உருவாகும் இந்த படம் முதல் பாகம் போலவே பெரும் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.