close
Choose your channels

விஷாலுக்கு எதிராக தயாரிப்பாளர் சங்கம் எடுத்த அதிரடி முடிவு

Monday, November 14, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த சில நாட்களாகவே தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திற்கும், நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷாலுக்கு கருத்துவேறுபாடு மற்றும் அறிக்கைப்போர் நடந்து வந்த நிலையில் இன்று விஷால், தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திலிருந்து வெளீயிடப்பட்டுள்ள ஒரு அறிக்கையில் இருந்து தெரிய வருகிறது. அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தயாரிப்பாளர் திரு.விஷால் அவர்கள் கடந்த 17.08.2016 அன்று ஆனந்த விகடன் வார இதழில் அளித்த பேட்டி சங்கத்தின் ஒற்றுமையையும், கட்டுப்பட்டையும் சீர்குலைக்கும் செயலாக இருந்தது. மேலும் இதுபோல் தொடர்ந்து அவர் சங்கத்தின் ஒற்றுமையை சீர்குலைக்கும் விதமாக பலமுறை நடந்து கொண்டதை குறிப்பிட்டு, அவருக்கு கடந்த 02.09.2013 அன்று தயாரிப்பாளர்கள் சங்கம் மூலமாக விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டது.
அதற்கு அவர் அளித்த பதில், 12.11.2016 அன்று நடைபெற்ற தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க செயற்குழு கூட்டத்தில் கலந்து ஆலோசித்ததில், திருப்தியாக அமையாத பட்சத்தில் செயற்குழு கூட்டத்தில் எடுத்த தீர்மானத்தின்படி, சங்கவிதி எண் 14-Dயில் உள்ளபடி M/s Vishal Film Factory நிறுவனத்தின் உரிமையாளர் திரு.விஷால் அவர்கள் சங்க அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து இன்று முதல் (14.11.2016) தற்காலிகமாக நீக்கப்படுகிறார் என்று தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.