close
Choose your channels

இரண்டே வாரத்தில் சுமார் ரூ.4 கோடி வசூலை நெருங்கிய 'தமிழ்ப்படம் 2'

Monday, July 23, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ரூ.100 கோடிக்கும் மேல் செலவு செய்து பிரமாண்டமான படங்களை எடுக்கும் இயக்குனர்கள் மத்தியில் ஒருசில கோடி செலவில் குறைந்த பட்ஜெட்டில் படம் இயக்கி அதை சூப்பர் ஹிட்டாக்கி வரும் படங்களும் கோலிவுட் திரையுலகில் அவ்வப்போது வந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில் 'கோலி சோடா', 'அருவி' போன்ற படங்களில் மத்தியில் தற்போது வெளிவந்துள்ள படம் 'தமிழ்ப்படம் 2'

வெளியான முதல் வாரத்திலேயே சென்னையில் மட்டும் ரூ.1,40,83,763 வசூல் செய்த இந்த படம் இரண்டாவது வாரத்திலும் கிட்டத்தட்ட ஒரு கோடி வசூலை நெருங்கிவிட்டது. அதாவது கடந்த வாரயிறுதி நாட்களில் சென்னையில் இந்த படம் 18 திரையரங்க வளாகங்களில் 206 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.92,95,304 வசூல் செய்துள்ளது. மேலும் திரையரங்குகளில் 85% ரசிகர்கள் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

'தமிழ்ப்படம் 2' வெளியான ஜூலை 12 முதல் நேற்று வரை ரூ.3,96,74,157 வசூலை பெற்றுள்ளது. குறைந்த பட்ஜெட் படம் ஒன்று சென்னையில் மட்டும் சுமார் ரூ.4 கோடி வசூல் பெறுவது என்பதை மிகப்பெரிய வெற்றியாகத்தான் பார்க்க வேண்டும்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.