close
Choose your channels

சூர்யாவின் 'தானா சேர்ந்த கூட்டம்' ஓப்பனிங் வசூல் விபரம்

Monday, January 15, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இந்த ஆண்டு பொங்கல் தின பரிசாக சூர்யாவின் ரசிகர்களுக்கு வெளிவந்த 'தானா சேர்ந்த கூட்டம்' திரைப்படம் ஊடகங்கள் மற்றும் விமர்சகர்களின் பெரும் பாராட்டுக்களை பெற்று திரையரங்குகளில் ஓடி வருகிறது.

இந்த ஆண்டின் முதல் வெற்றிப்படம் என சினிமா ரசிகர்களால் உறுதி செய்யப்பட்ட இந்த படத்தின் சென்னை ஓப்பனிங் வசூலும் அபாரமாக உள்ளது. இந்த படம் சென்னையில் 21 திரையரங்குகளில் 390 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.2,28,32,206 வசூல் செய்துள்ளது. மேலும் இந்த படத்திற்கு திரையரங்குகளில் 95% பார்வையாளர்கள் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் பாசிட்டிவ் ரிசல்ட் காரணமாக நீண்ட பொங்கல் விடுமுறையில் திரையரங்குகளில் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருப்பதால் சூர்யாவின் பெஸ்ட் வசூல் படமாக இந்த படம் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.