close
Choose your channels

'தல' ரசிகர்களுக்கு இன்றிரவு இரட்டை விருந்து?

Wednesday, September 23, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

'வீரம்' சிவா இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் 'தல 56' படத்தின் அதிகாரபூர்வமான டைட்டில் எப்போது வரும் என அஜீத் ரசிகர்கள் உள்பட அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், இன்று இரவு 11.30 மணிக்கு இந்த படத்தின் டைட்டில் அறிவிக்கப்படவுள்ளதாக அஜீத்தின் மேனேஜர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். எனவே இம்முறை அஜீத் ரசிகர்களுக்கு ஏமாற்றம் இருக்காது என்றே உறுதியாக நம்பப்படுகிறது.

இன்று இரவு டைட்டில் மட்டுமின்றி 'தல 56' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கும் வெளிவரவுள்ளதாக கூறப்படுகிறது. எனவே இன்று இரவு முழுவதும் சமூக இணையதளத்தில் உள்ள அஜீத் ரசிகர்களுக்கு இரட்டை விருந்துதான் என்பதில் சந்தேகமில்லை.

அஜீத் படம் குறித்து ஏதாவது சின்ன சின்ன தகவல் வந்தாலே சமூக வலைத்தளத்தில் டிரெண்டுக்கு கொண்டு வரும் அஜீத் ரசிகர்கள் இன்று இரவு டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக்கை எந்த லெவலுக்கு கொண்டு செல்வார்கள் என்பதை கற்பனை செய்துகூட பார்க்க முடியவில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.