close
Choose your channels

'தளபதி 65' படத்தின் டைட்டில் இதுவா? வைரலாகும் போஸ்டர்!

Wednesday, December 9, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்து முடித்துள்ள ’மாஸ்டர்’ திரைப்படம் வரும் பொங்கல் திருநாளில் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ’தளபதி 65’ படத்தை இயக்க இருப்பது யார் என்ற கேள்விக்கு இன்னும் விடை தெரியவில்லை என்றாலும் நெல்சன் இந்த படத்தை இயக்க அதிக வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது

ஏற்கனவே விஜய்சேதுபதி-நயனின் ‘கோலமாவு கோகிலா’, சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ ஆகிய படங்களை இயக்கியுள்ள நெல்சன் இந்த படத்தை இயக்குவது உறுதி என்றால் அது அவரது மூன்றாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தளபதி விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கவுள்ள ’தளபதி 65’படத்தின் டைட்டில் குறித்த போஸ்டர் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ’டார்கெட் ராஜா’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க இருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது

’தளபதி 65’ படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக இந்த போஸ்டரை வெளியிட வில்லை என்றாலும் இந்த போஸ்டரில் இருக்கும் தகவல்கள் உண்மையாக இருக்க வேண்டும் என்று ரசிகர்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றார்கள். தளபதி விஜய்யின் 65வது படம் குறித்த அறிவிப்பு வரும் புத்தாண்டில் வெளியாகுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.