close
Choose your channels

திமுக ஆட்சி காரணமாக 'பீஸ்ட்' டைட்டில் மாறுகிறதா?

Friday, August 13, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

திமுக ஆட்சியில் காரணமாக தளபதி விஜய்யின் ‘பீஸ்ட்’ படத்தின் டைட்டில் மாற இருப்பதாக வெளி வந்திருக்கும் செய்தி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த பத்தாண்டுகளுக்கு முன்னர் மு கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சியில் தமிழில் டைட்டில் வைக்கும் திரைப்படங்களுக்கு வரி விலக்கு என அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த அறிவிப்பை அடுத்த கிட்டத்தட்ட அனைத்து படங்களின் டைட்டில்களும் தமிழில் தான் வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது..

இந்த வரிவிலக்கு அதிமுக ஆட்சியில் தொடர்ந்த போதிலும் ஒரு சில பிரச்சனைகள் ஏற்பட்டது என்பதும் இதனை அடுத்து தமிழில் டைட்டில் வைக்கும் படங்களுக்கு வரிவிலக்கு இல்லை என்ற அறிவிப்பு வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பின்னரே பல படங்களின் டைட்டில் மீண்டும் ஆங்கிலம் உள்பட ஒரு சில மொழிகளில் தொடர்ந்தது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் தற்போது மீண்டும் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு திமுக ஆட்சி உருவாகி இருக்கும் நிலையில் மீண்டும் தமிழில் டைட்டில் வைக்கும் திரைப்படங்களுக்கு வரி விலக்கு என்ற அறிவிப்பு விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை அடுத்து பல திரைப் படங்களின் டைட்டில்கள் தமிழில் மாற்றப்படும் என்று கூறப்படுகிறது.

அந்த வகையில் தளபதி விஜய்யின் திரைப்படத்திற்கு ’பீஸ்ட்’ என்ற ஆங்கிலத்தில் டைட்டில் வைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த படத்திற்கும் தமிழில் டைட்டில் வைக்க அதிக வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.