close
Choose your channels

அஜித்தின் 'விஸ்வாசம்' படத்தில் 2 கெட்டப்புகளில் நடிக்கும் பிரபல நடிகர்

Tuesday, July 17, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தல அஜித் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கி வரும் 'விஸ்வாசம்' திரைப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. இந்த நிலையில் இந்த படத்தில் அஜித்துக்கு இரண்டு வித கெட்டப்புகள் என்றும் ஒன்று வயதான தோற்றம் இன்னொன்று ஸ்டைலிஷான இளமை தோற்றம் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் அஜித்தை போலவே இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் தம்பி ராமையாவுக்கு இளமை மற்றும் முதிய தோற்றம் ஆகிய இரண்டு கெட்டப்புகள் என்பது தற்போது தெரியவந்துள்ளது. இரண்டு கெட்டப்புகளிலும் தம்பி ராமையா தோன்று புகைப்படங்கள் தற்போது வெளியாகி இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

அஜித், நயன்தாரா, விவேக், கோவை சரளா, யோகிபாபு, ரோபோ சங்கர், தம்பி ராமையா, போஸ் வெங்கட், உள்ளிட்ட பலர் நடித்து வரும் 'விஸ்வாசம்' படத்திற்கு டி.இமான் இசையமைத்து வருகிறார். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்திற்கு வெற்றி ஒளிப்பதிவும், ரூபன் படத்தொகுப்பு பணியும் செய்து வருகின்றனர்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.