close
Choose your channels

விஜய் - கோபிசந்த் படத்தை தயாரிப்பது யார்? ஆச்சரியமான தகவல்..!

Saturday, May 6, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடிக்க இருக்கும் 68 வது திரைப்படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் கோபிசந்த் இயக்க உள்ளார் என்ற செய்தி வெளியாகிக் கொண்டிருக்கிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த தகவல் கிட்டத்தட்ட உறுதி என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவித்து வரும் நிலையில் தற்போது இந்த படத்தை தயாரிக்கும் தயாரிப்பு நிறுவனம் எது என்பது குறித்த தகவலும் கசிந்து உள்ளது.

சமீபத்தில் தளபதி விஜய்யை சந்தித்து இயக்குனர் கோபிசந்த் கூறிய கதை அவருக்கு பிடித்து விட்டதாகவும் இதனை அடுத்து ’தளபதி 68’ படத்தை இயக்குவது அவர் தன் என்றும் கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தை தயாரிப்பது சூப்பர் குட் பிலிம்ஸ் என்றும் ’தளபதி 68 ’திரைப்படம் சூப்பர் ஹிட் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100 ஆவது படம் என்றும் கூறப்படுகிறது.

ஏற்கனவே விஜய் நடித்த ஒரு சில சூப்பர் ஹிட் படங்களை சூப்பர் ஹிட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள நிலையில் தற்போது ’தளபதி 68’ படத்தையும் தயாரிக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு ’லியோ’ படத்தின் ரிலீஸ்க்கு முன்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.