close
Choose your channels

ஆகஸ்ட் 10ல் வெளியாகும் 'ஜெயிலர்': ரஜினிக்கு திரையரங்கு உரிமையாளர்கள் முக்கிய வேண்டுகோள்..!

Tuesday, August 1, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் திரையரங்கு உரிமையாளர்கள் ரஜினிக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளனர். இது குறித்து திரையரங்க உரிமையாளர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஜெயிலர்' ஆடியோ இசை வெளியீட்டு விழாவில் சூப்பர் ஸ்டார் அவர்கள் அனைவரும் திரையரங்குக்கு வந்து படம் பாருங்கள் என்று பேசி உள்ளார். அது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி. அதேபோல தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் ஜெயிலர்' படம் திரையிட ஆவலாக உள்ளனர்

அதனால் சூப்பர் ஸ்டார் அவர்கள் தமிழகத்தில் உள்ள எல்லா திரையரங்குகளிலும் ஜெயிலர்' படத்தை திரையிட ஆவணம் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று அறிக்கை வெளியாகி உள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகி இருக்கும் ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் ரஜினிகாந்த், சிவராஜ்குமார், மோகன்லால், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சுனில், ஜாக்கி ஷெராப், வசந்த் ரவி, விநாயகன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, உட்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவும், நிர்மல் படத்தொகுப்பும் செய்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.