close
Choose your channels

சூர்யாவுக்கு கொடுத்த ரோலக்ஸ் வாட்சுக்கு இப்படி ஒரு செண்டிமெண்ட் இருக்கின்றதா?

Tuesday, June 14, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த ’விக்ரம்’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்று இரண்டாவது வாரத்திலும் ஹவுஸ்புல் காட்சிகளாக திரையரங்குகளில் ஓடிவருகிறது. இந்த படம் 300 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து விட்டது என்பதும் இந்த படம் மொத்தம் 500 கோடி ரூபாய் வசூல் செய்ய வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் ’விக்ரம்’ படத்தின் வெற்றியை அடுத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ்க்கு கார் பரிசளித்த கமல்ஹாசன், 13 உதவி இயக்குனர்களுக்கு விலை உயர்ந்த பைக்குகளை பரிசாக அளித்தார். அதன்பின் இந்த படத்தில் ரோலக்ஸ் என்ற கேரக்டரில் நடித்த சூர்யாவுக்கு ரோலக்ஸ் வாட்ச் வாட்ச் அளித்தார் என்பதும் இதுகுறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகியது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் கமல்ஹாசன் கொடுத்த ரோலக்ஸ் வாட்சுக்கு ஒரு சென்டிமென்ட் இருப்பது தற்போது தெரிய வந்துள்ளது. அது புதிய வாட்ச் இல்லை என்றும் கமல்ஹாசன் பல வருடங்களாக பயன்படுத்திய வாட்ச் என்றும் அந்த வாட்ச் கமல்ஹாசனுக்கு மிகவும் நெருக்கமானது என்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார். கமல்ஹாசன் மிகவும் சென்டிமென்டாக வைத்திருந்த வாட்சை தான் சூர்யாவுக்கு பரிசாக கொடுத்து உள்ளார் என்ற தகவல் தற்போது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.