close
Choose your channels

ரூ.125 கோடி வசூல் செய்த சூப்பர் ஹிட் படம் உட்பட இந்த வாரம் ஓடிடியில் என்னென்ன படங்கள்?

Thursday, April 25, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஒவ்வொரு வாரமும் புதிய திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில் ஒரு மாதத்திற்கு முன்பு வெளியான படங்கள் ஓடிடியில் வெளியாகி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் நாளை எந்தெந்த ஓடிடியில் என்னென்ன திரைப்படங்கள் வெளியாக உள்ளது என்பதை பார்ப்போம்.

இந்த வாரம் தமிழில் பெரிய அளவில் ஸ்டார் படங்கள் வெளியாகவில்லை என்றாலும் ரூ.125 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை செய்த படமான ’தில்லு ஸ்கொயர்’ என்ற தெலுங்கு படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகவுள்ளது. சித்து மற்றும் அனுபமா பரமேஸ்வரன் நடித்த இந்த படம் ரூ.125 கோடிக்கு மேல் வசூல் செய்து மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் நாளை இந்த படம் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இதனை அடுத்து விஜய் தேவரகொண்டா நடித்த ‘தி ஃபேமிலி ஸ்டார்’ என்ற தெலுங்கு படமும் நாளை அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாக உள்ளது என்றும் அதேபோல் ‘பீமா’ என்ற தெலுங்கு படம் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாக உள்ளது.

தமிழைப் பொறுத்தவரை ’வெப்பம் குளிர் மழை’ என்ற படம் ஆகா ஓடிடியில், ’இடி மின்னல் காதல்’ என்ற படமும் ஆகா ஓடிடியில் வெளியாகியுள்ளது. மேலும் ’யுவா’ என்ற கன்னட படம் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகிறது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.