close
Choose your channels

இந்த வார ஓடிடி முழு விவரங்கள்.. எத்தனை தமிழ் படங்கள்?

Wednesday, August 23, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஒவ்வொரு வாரமும் திரையரங்குகளில் புதிய திரைப்படங்கள் வெள்ளிக்கிழமை வெளியாகி கொண்டிருக்கும் நிலையில் அதே நாளில் திரையரங்கில் வெளியான புதிய திரைப்படங்கள் ஓடிடியில் வெளியாகி வருகின்றன.

அந்த வகையில் இந்த வாரம் இரண்டு தமிழ் படங்கள் உள்பட ஒரு சில திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்கள் ஓடிடியில் வெளியாக இருக்கின்றன. அது குறித்த தகவலை தற்போது பார்ப்போம்.

அஸ்வின் நடித்த ’பீட்சா 3’ என்ற திரைப்படம் கடந்த ஜூலை மாதம் திரையரங்குகளில் வெளியான நிலையில் இந்த படம் இந்த வாரம் சிம்ப்ளி சவுத் ஓடிடியில் வெளியாக உள்ளது. அதேபோல் செம்பருத்தி சீரியல் நாயகன் கார்த்திக் ராஜ் மற்றும் தீக்‌ஷி நடித்த ’பிளாக் அண்ட் ஒயிட்’ ஜீ தமிழ் ஓடிடியில் வெளியாக உள்ளது.

இந்த இரண்டு படங்கள் தவிர விஜய் தேவரகொண்டா சகோதரர் ஆனந்த் தேவரகொண்டா நடித்த ‘பேபி’ என்ற தெலுங்கு திரைப்படம் ஆஹா ஓடிடியில், ‘பருந்து’ என்ற தெலுங்கு படம் ஈடிவி ஓடிடியில், ‘சீதா பாலகிருஷ்ணா’ என்ற தெலுங்கு படம் ஹங்மா பிளே என்ற ஓடிடியில் வெளியாகவுள்ளது.

அதேபோல் ‘கிருக்கன்’ என்ற மலையாள படம் சிம்ப்ளி சவுத் ஓடிடியில், மதுர மனோகரா மோகம் என்ற மலையாள திரைப்படம் HR Ott என்ற ஓடிடியில், ‘புரோ தி அவதார்’ என்ற தெலுங்கு திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகவுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.