close
Choose your channels

'தக்லைஃப்' ரிலீஸ் எப்போது? முக்கிய அறிக்கையை வெளியிட்ட தயாரிப்பு குழுவினர்..!

Wednesday, May 8, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் ’தக்லைஃப்’ படத்தின் ரிலீஸ் தேதி எப்போது என்பது குறித்து அறிவிப்பை இந்த படத்தின் தயாரிப்பு குழுவினர் இணைந்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

’தக்லைஃப்’ படத்தின் தயாரிப்பு நிறுவனங்களான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மூவிஸ், ரெட் ஜெயண்ட் மூவீஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் ஆகிய மூன்று நிறுவனங்கள் இணைந்து வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

’விக்ரம்’ என்ற மாபெரும் வெற்றி படத்தை அடுத்து கமல்ஹாசனின் ’தக்லைஃப்’ திரைப்படம் தற்போது உருவாகி வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு மணிரத்னம் அவர்களால் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 37 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு மிகப்பெரிய இயக்குனர் மற்றும் நடிகர் இணைந்துள்ள இந்த படத்தில் மற்ற பிரபல நடிகர்களும் நடித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த படத்தின் கூடுதல் இணைப்பாக சிம்பு இணைந்துள்ளதை அதிகாரபூர்வமாக அறிவிக்கிறோம்.

கமல்ஹாசனின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனம், மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தை ஆர் மகேந்திரன் மற்றும் சிவா ஆனந்த் அவர்களும் இணைந்து தயாரிக்கின்றனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். ரவி கே சந்திரன் ஒளிப்பதிவும் ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு பணியையும் செய்து வருகின்றனர்.

இந்த படத்தின் ஸ்டண்ட் இயக்குனர்களாக அன்பறிவ் பணிபுரிந்து வரும் நிலையில் இந்த படத்தின் மற்ற தொழில்நுட்ப பணிகளை வல்லுநர்கள் செய்து வருகின்றனர். மேலும் இந்த படத்தின் டீசர், கமல்ஹாசனின் லுக் உட்பட அனைத்தும் விரைவில் வெளியாகும் என்று தெரிவித்துக் கொள்வதோடு இந்த படம் இந்த ஆண்டு இறுதியில் வெளியாகும் என்றும் தெரிவித்து கொள்கிறோம்’ என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.