close
Choose your channels

இளையராஜாவை தொடர்ந்து யுவன்ஷங்கர் ராஜாவின் பயோபிக்.. ஒரு வரியில் கதை சொன்ன இயக்குனர்..!

Wednesday, May 8, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் விரைவில் உருவாக இருக்கும் நிலையில் அவரது மகன் யுவன் சங்கர் ராஜாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமும் உருவாக இருப்பதாகவும் அவரிடம் ஒரே ஒரு வரியில் கதை சொல்லி இருப்பதாகவும் பிரபல இயக்குனர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் ’இளையராஜா’ என்ற பெயரில் உருவாக இருப்பதாகவும் இந்த படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளிவந்தது என்பதும் தெரிந்தது. இளையராஜா கேரக்டரில் தனுஷ் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தை ’கேப்டன் மில்லர்’ படத்தை இயக்கிய அருண் மாதேஸ்வரன் என்பவர் இயக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இளையராஜாவை அடுத்து யுவன் சங்கர் ராஜாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை படமாக்க அவரிடம் ஒரே ஒரு வரியில் கதை சொல்லி இருப்பதாகவும் அந்த கதை யுவனுக்கு பிடித்து விட்டதால் அவருடைய வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை இயக்குவதற்கு விரைவில் ஒப்பந்தம் செய்யப்படுவேன் என்று எதிர்பார்க்கிறேன் என்று இயக்குனர் இளன் தெரிவித்துள்ளார்.

இயக்குனர் இளன் இயக்கத்தில் கவின் நடிப்பில் உருவான ’ஸ்டார்’ திரைப்படம் வரும் வெள்ளி அன்று வெளியாக இருக்கும் நிலையில் இந்த தகவல் ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. யுவன் சங்கர் ராஜாவின் ஆரம்ப கால வாழ்க்கை, சினிமா துறையில் அவரது படிப்படியான வளர்ச்சி உள்ளிட்ட விஷயங்கள் இந்த படத்தில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ஒரே நேரத்தில் இளையராஜா மற்றும் அவரது மகன் யுவன் சங்கர் ராஜா ஆகிய இருவரது பயோபிக் திரைப்படங்கள் உருவாகுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.