close
Choose your channels

'துணிவு' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி திடீர் மாற்றமா? 'வாரிசு' படக்குழுவினர்களின் ரியாக்சன் என்ன?

Tuesday, January 3, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் நடித்த ’துணிவு’ மற்றும் விஜய் நடித்த ’வாரிசு’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் ஒரே நாளான ஜனவரி 12ஆம் தேதி பொங்கல் விருந்தாக வெளியாக உள்ளது என்று செய்திகள் வெளியானது. இரண்டு படங்களில் சென்சார் தகவல்கள் வெளியான பின்னரும் இன்னும் அதிகாரபூர்வமான ரிலீஸ் தேதி வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அஜித்தின் ’துணிவு’ திரைப்படம் சென்சாரில் ’யுஏ’ சான்றிதழ் பெற்றுள்ளதாகவும் 2 மணி நேரம் 25 நிமிடங்கள் ரன்னிங் டைம் கொண்ட இந்த படம் ஜனவரி 11ஆம் தேதி அதாவது ’வாரிசு’ ரிலீசுக்கு ஒரு நாள் முன்பே ரிலீசாக இருப்பதாகவும் சற்று முன் வெளியான தகவல் தெரிவிக்கிறது.

ஆனால் சென்சாரில் ’யு’ சான்றிதழ் பெற்றுள்ள ’வாரிசு’ திரைப்படம் 2 மணி நேரம் 50 நிமிடங்கள் ரன்னிங் டைம் பெற்று உள்ளது என்றும் இந்த படம் ஏற்கனவே திட்டமிட்டபடி ஜனவரி 12-ம் தேதிதான் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. மேலும் ’வாரிசு’ படத்தின் டிரைலர் நாளை வெளியாக அதிக வாய்ப்பு கூறப்படுகிறது.

மேற்கண்ட தகவல்கள் உறுதி செய்யப்பட்டால் ’வாரிசு’ ’துணிவு’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் ஒரே நாளில் ரிலீஸ் இல்லை என்றும் அடுத்தடுத்த நாட்களில் ரிலீஸாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே நேரத்தில் இன்று அல்லது நாளை இந்த இரு படங்களின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி வெளியான பின்னரே இந்த செய்திகள் உறுதி செய்யப்படும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.