close
Choose your channels

டிடிஎப் வாசனுடன் நெருக்கமாக இருக்கும் நடிகை யார்? வைரல் வீடியோ, புகைப்படங்கள்..!

Saturday, January 6, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

டிடிஎப் வாசன் தனது சமூக வலைத்தளத்தில் நடிகை ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் அவை வைரல் ஆகி வருகிறது.

அதிவேகமாக பைக் ஓட்டியதால் விபத்துக்குள்ளான டிடிஎப் வாசன் மீது வழக்கு தொடுக்கப்பட்ட நிலையில் சில வாரங்கள் சிறையிலிருந்த அவர், சமீபத்தில் தான் ஜாமீனில் வெளியே வந்தார். மேலும் அவர் சிறையில் இருக்கும் போது அவரது டிரைவிங் லைசென்ஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அவர் பைக் ஓட்ட முடியாத நிலையில் உள்ளார்

இந்த நிலையில் ’மஞ்சள் வீரன்’ என்ற திரைப்படத்தில் டிடிஎப் வாசன் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் சமீபத்தில் அவர் தனது சமூக வலைத்தளத்தில் நடிகை ஷாலின் சோயா என்பவர் உடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் மற்றும் வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் டிடிஎப் வாசன் ’ஹாய்’ என பதிவு செய்த நிலையில் ஷாலின் சோயாவும் ஹார்டின் எமோஜியை பதிவு செய்துள்ளார்.

இதனை பார்த்த நெட்டிசன்கள் இருவரும் காதலிக்கிறார்களா? என்ற கேள்வியை எழுப்பி வருகின்றனர். நடிகை ஷாலின் சோயா ’ராஜா மந்திரி’ ’கண்ணகி’ உள்பட ஒரு சில படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் தான் ‘மஞ்சள் வீரன்’ படத்தில் நாயகியாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

டிடிஎப் வாசன் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் ’மஞ்சள் வீரன்’ படப்பிடிப்பிற்காக எடுக்கப்பட்டதா? அல்லது உண்மையிலேயே இருவரும் காதலிக்கிறார்களா? என்பதை போகப் போக போக தான் தெரிந்து கொள்ள முடியும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.