close
Choose your channels

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் 'பிகில்' நடிகை? விஜய் டிவி பிரபலமும் உண்டு என தகவல்..!

Friday, August 25, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி இன்னும் ஒரு சில வாரங்களில் தொடங்க இருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கும் போட்டியாளர்கள் குறித்த தகவல் அவ்வப்போது கசிந்து வருகிறது என்பதை பார்த்தோம்.

ஏற்கனவே விஜய் டிவி ஜாக்குலின், இரவின் நிழல் நடிகை ரேகா நாயர், பத்திரிகையாளர் மற்றும் நடிகர் பயில்வான் ரங்கநாதன், கடந்த சீசனில் கலந்து கொண்ட ரக்ஷிதாவின் கணவர் தினேஷ், நடிகர் பிருத்விராஜ், கோவை டிரைவர் ஷர்மிளா, செய்தி வாசிப்பாளர் ரஞ்சித் உட்பட ஒரு சிலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது விஜய் நடித்த ’பிகில்’ படத்தில் நடித்த நடிகை ஒருவரும் விஜய் டிவி பிரபலம் ஒருவரும் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த சீசன்களில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வார் என்று கூறப்பட்டவர் மாகாபா ஆனந்த். இவர் இந்த சீசனில் கண்டிப்பாக கலந்து கொள்வார் என்று கூறப்படுகிறது.

அதேபோல் விஜய் நடித்த ’பிகில்’ திரைப்படத்தில் நடித்த ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா ரோபோ சங்கரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. இன்னும் ஒரு சில மாதங்களில் இந்திராஜாவுக்கு திருமணம் நடைபெற இருக்கும் நிலையில் அவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளார் என்று கூறப்படுகிறது.

இன்னும் யார் யாரெல்லாம் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos