close
Choose your channels

பாடகி சித்ராவுக்கு ஐக்கிய அரபு அமீரகம் செய்த கெளரவம்!

Wednesday, October 20, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல பின்னணி பாடகி சித்ரா அவர்களுக்கு ஐக்கிய அரபு அமீரகம் நாடு சிறப்பான கெளரவம் ஒன்றை செய்துள்ளதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

கடந்த சில மாதங்களாக ஐக்கிய அரபு நாடு இந்திய திரையுலக நட்சத்திரங்கள் சிலருக்கு கோல்டன் விசாவை வழங்கி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக மம்முட்டி, மோகன்லால், துல்கர் சல்மான், மீரா ஜாஸ்மின், ஊர்வசி ரெளட்டாலா உள்ளிட்ட பலருக்கு இந்த கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கோல்டன் விசா 10 ஆண்டுகளுக்குச் செல்லுபடி ஆகும் என்றும் அதன்பின்னர் புதுப்பித்துக் கொள்ளலாம் என்றும் இந்த விசாவை வைத்திருப்பவர்கள் ஐக்கிய அரபு அமீரகம் நாட்டின் குடிமகன் போகவே கௌரவிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அடுத்ததாக பிரபல பின்னணி பாடகி சித்ரா அவர்களுக்கு கோல்டன் விசா ஐக்கிய அரபு அமீரகம் வழங்கி அவரை கௌரவப்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து பாடகி சித்ரா அவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.