close
Choose your channels

உதயநிதி-மாரி செல்வராஜின் 'மாமன்னன்' படத்தின் சூப்பர் அப்டேட்..!

Saturday, April 29, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான ’மாமன்னன்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதி கட்டப் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் சூப்பர் அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது.

மாரி செல்வராஜின் ’மாமன்னன்’ திரைப்படம் வரும் ஜூன் மாதம் வெளியாக அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படும் நிலையில் மே ஒன்றாம் தேதி தொழிலாளர் தினத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ள நிலையில் அந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது. மேலும் மே ஒன்றாம் தேதி வெளியாகும் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், பகத் பாசில், வடிவேலு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகிய அந்த படத்திற்கு இசை புயல் ஏஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் மாரி செல்வராஜின் அடுத்த வெற்றி படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.