close
Choose your channels

உதயநிதியின் 'கண்ணை நம்பாதே' ரன்னிங் டைம் இவ்வளவுதானா?

Thursday, March 16, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகி இருக்கும் ’கண்ணை நம்பாதே’ என்ற திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் ரன்னிங் டைம் குறித்த தகவல் வெளியாகி ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மு மாறன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் ’கண்ணை நம்பாதே’. த்ரில் கதைய அம்சம் கொண்ட இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டிரைலரில் '‘இந்த உலகத்தில் நடக்கும் ஒவ்வொரு கொலைக்கும் ஒரு அழுத்தமான காரணம் இருக்கும். சில பேர் செஞ்ச தப்பை மறைப்பதற்காக கொலை செய்வார்கள். இன்னும் சில பேர் இனிமேல் தப்பே நடக்கக்கூடாது என்பதற்காக கொலை செய்வார்கள். ஆனால் நான்..’ என உதயநிதி ஸ்டாலின் பின்னணி குரல் இருந்ததை அடுத்து இந்த படத்தின் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் தற்போது ’கண்ணை நம்பாதே’ திரைப்படத்தின் ரன்னிங் டைம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இந்த படம் 130 நிமிடங்கள் மட்டுமே அதாவது 2 மணி நேரம் 10 நிமிடங்கள் மட்டுமே ரன்னிங் டைமாக உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சமீப காலமாக இரண்டரை மணி நேரம், மூன்று மணி நேர ரன்னிங் டைம் கொண்ட திரைப்படங்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில் 2 மணி நேரம் 10 நிமிடம் மட்டுமே ரன்னிங் டைம் உள்ள இந்த படம் நிச்சயம் ரசிகர்களை கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உதயநிதி ஸ்டாலின், ஆத்மிகா, ஸ்ரீகாந்த், பிரசன்னா, பூமிகா, சதீஷ், மாரிமுத்து, பழ கருப்பையா, சென்றாயன், கு ஞானசம்பந்தம் உள்பட பலரது நடிப்பில் உருவாகிய ’கண்ணை நம்பாதே’ திரைப்படம், சித்து குமார் இசையில் ஜலந்தர் வாசன் ஒளிப்பதிவில் சான் லோகேஷ் படத்தொகுப்பில் உருவாகியுள்ளது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.