close
Choose your channels

ஒண்ணு உன் தாய், இன்னொன்னு உன் நாய்.. ரெண்டுல எது வேணும்.. ஊர்வசியின் 'அப்பத்தா' டிரைலர்..!

Monday, July 24, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஊர்வசி முக்கிய காலத்தில் நடித்த ‘அப்பத்தா’ என்ற திரைப்படம் வரும் 29ஆம் தேதி ஜியோ சினிமாவில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

கிராமத்தில் வாழும் அப்பத்தா என்ற ஊர்வசியை அவரது மகன் சென்னைக்கு அழைக்கிறார். ஆசை ஆசையாக மகனை சந்திக்க செல்லும் ஊர்வசிக்கு தனது மகன் குடும்பத்துடன் சுற்றுலா செல்வதாகவும் வீட்டில் இருக்கும் நாயை பாதுகாத்துக் கொள்வதற்காக தான் தன்னை அழைத்து இருப்பதாகவும் தெரிய வந்ததும் அதிர்ச்சி அடைகிறார்.

மகன் தனது குடும்பத்தோடு சுற்றுலா சென்றதும் அந்த நாயுடன் ஊர்வசி படும் பாடுதான் இந்த படத்தின் காமெடி கதை என்பது குறிப்பிடத்தக்கது . இயக்குனர் பிரியதர்ஷன் இந்த திரைப்படத்தை இயக்கி உள்ளார். மேலும் இந்த படம் ஊர்வசியின் 700 வது படம் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த படத்தில் நடித்த அனுபவம் குறித்து நடிகை ஊர்வசி கூறியபோது பிரியதர்ஷன் மற்றும் அவரது குழுவினர்களுடன் இணைந்து நடித்தது தனக்கு மிகப் பெரிய அனுபவமாக இருந்தது என்றும் நல்ல கதை மற்றும் குடும்ப செண்டிமெண்ட் கலந்த காட்சிகள் அனைவரையும் கவரும் என்று எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.