close
Choose your channels

'மாரி 2' படத்தில் வரலட்சுமியின் 'மாஸ்' கேரக்டர்

Wednesday, February 14, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மாரி 2 படத்தில் வரலட்சுமியின் மாஸ் கேரக்டர்

 

தனுஷ் நடிப்பில் பாலாஜி மோகன் இயக்கத்தில் உருவாகி வரும் 'மாரி 2' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் தனுஷூக்கு ஜோடியாக சாய்பல்லவியும், வில்லனாக டொவினோ தாமஸூம் நடிக்கவுள்ளதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் இந்த படத்தில் வரலட்சுமி சரத்குமார் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாக படக்குழுவினர்களால் அறிவிக்கப்பட்டது. தற்போது இவருடைய கேரக்டர் குறித்த தகவல் வெளிவந்துள்ளது.

வரலட்சுமி இந்த படத்தில் நெகட்டிவ் கேரக்டரில் நடிக்கவுள்ளதாகவும், அவருடைய கேரக்டர் இந்த படத்தின் மாஸ் கேரக்டர் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே தனுஷின் 'விஐபி 2' படத்தில் பாலிவுட் நடிகை கஜோல் நெகட்டிவ் கேரக்டரில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

தனுஷின் வொண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கின்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.