close
Choose your channels

வேல்ஸ் பிலிம்ஸ் ஐசரி கணேஷின் அடுத்த படத்தின் ஹீரோ இவர் தான்: அதிகாரபூர்வ அறிவிப்பு

Monday, November 14, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரை உலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் பல வெற்றி படங்களை தயாரித்து வருகிறது என்பது தெரிந்ததே. இந்தநிலையில் இந்நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது

வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் அடுத்த படத்தின் ஹீரோவாக நடிக்க இருப்பவர் ஹிப்ஹாப் தமிழா ஆதி என அறிவிக்கப்பட்டுள்ளது. ஹிப்-ஹாப் தமிழா ஆதி நடித்து இசையமைக்கும் இந்த படத்தை கார்த்திக் வேணுகோபாலன் என்பவர் இயக்க உள்ளார். இவர் ஏற்கனவே பிக்பாஸ் ரியோ நடித்த ‘நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா’ என்ற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது

மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவில் பிரசன்னா படத்தொகுப்பில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பில் படக்குழுவினர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.