close
Choose your channels

'நீ எப்ப வரப்போற மச்சான்': வெந்து தணிந்தது காடு வீடியோ பாடல் ரிலீஸ்!

Tuesday, September 6, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிம்பு நடிப்பில், கவுதம் மேனன் இயக்கத்தில் உருவான ’வெந்து தணிந்தது காடு’ என்ற படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்து வரும் 15-ஆம் தேதி ரிலீசாக உள்ளது.

சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி மிகப்பெரிய அளவில் இணைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் சற்று முன் ’வெந்து தணிந்தது காடு’ படத்தில் இடம்பெற்றுள்ள ’மல்லிப்பூ’ என்று தொடங்கும் பாடல் வெளியாகி வைரலாகி வருகிறது.

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் கவிஞர் தாமரை பாடல் வரிகளில் உருவாகிய இந்த பாடலை மதுஸ்ரீ பாடியுள்ளார். இந்த பாடலின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி இந்த படத்தில் சிம்பு, சித்தி இதானி, ராதிகா, சித்திக், நீரஜ் மகாதேவன் உள்பட பலர் நடித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.