close
Choose your channels

'டாப் குக்கு டூப் குக்கு' நிகழ்ச்சியின் தயாரிப்பாளர் வெங்கடேஷ் பட்டா? பரபரப்பு தகவல்..!

Tuesday, April 30, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் டிவியில் ’குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி கடந்த சனி ஞாயிறு அன்று இரண்டு எபிசோடுகள் வெளியானது என்பதும் கடந்த நான்கு சீசன்கள் போலவே இந்த சீசனும் கலகலப்பாக இருந்தது என்பதும் தெரிந்தது. இந்த நிகழ்ச்சியில் வெங்கடேஷ் பட் இல்லாதது ஒரு குறையாக இருந்தாலும் புதிய குக்குகள் மற்றும் கோமாளிகள் எபிசோடு முழுவதும் காமெடியில் கலக்கினார்கள் என்பதும் கடந்த நான்கு சீசன்களில் இந்த சீசன் எந்த விதத்திலும் குறைவில்லை என்பதைத்தான் இரண்டு எபிசோடுகள் நிரூபித்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி ஒளிபரப்பான அதே தினத்தில் வெங்கடேஷ் பட் தனக்கு சமூக வலைதளத்தில் சன் டிவியில் புதிய நிகழ்ச்சி ஒன்று வெளியாக இருப்பதாகவும் முன்னோட்ட வீடியோ விரைவில் வெளியாகும் என்றும் கூறியிருந்தார். அதன்படியே ’டாப் குக்கு டூப் குக்கு’ என்ற நிகழ்ச்சியின் முன்னோட்டம் சன் டிவியில் ஒளிபரப்பான நிலையில் அதில் வெங்கடேஷ் பட் மட்டுமின்றி ’குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கோமாளிகளான மோனிஷா, ஜிபி முத்து, பரத், மற்றும் தீபா உள்பட சிலர் கலந்து கொண்டனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் ’டாப் குக்கு டூப் குக்கு’நிகழ்ச்சியின் தயாரிப்பாளர் வெங்கடேஷ் பட் என சமூக வலைதளங்களில் சிலர் பதிவு செய்து வரும் நிலையில் அந்த தகவல் உண்மை இல்லை என்பது தற்போது தெரியவந்துள்ளது. இந்த நிகழ்ச்சியை தயாரிப்பது ’குக் வித் கோமாளி’ நான்கு சீசன்களை தயாரித்த மீடியா மிஷன் நிறுவனம் தான் என்பதை அந்நிறுவனத்தினர் உறுதி செய்துள்ளனர்.

முதல் முறையாக நாங்கள் சன் டிவியில் சேர்ந்து இருக்கிறோம், நாங்கள் தான் இந்த நிகழ்ச்சியை தயாரித்து வருகிறோம் என்று அவர்கள் உறுதி செய்துள்ளதை அடுத்து இந்நிகழ்ச்சியின் தயாரிப்பாளர் வெங்கடேஷ் பட் இல்லை என்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.