close
Choose your channels

விஜய் படத்தை இயக்குகிறேன்: தேசிய விருது பெற்ற இயக்குனர் உறுதி!

Sunday, March 28, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடிக்க உள்ள படத்தை இயக்க இருப்பதாக தேசிய விருது பெற்ற இயக்குனர் ஒருவர் உறுதியுடன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்

தளபதி விஜய் நடிக்கும் 65வது படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்க உள்ளார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையின் தளபதி விஜய்யின் அடுத்தடுத்த படங்களை இயக்குவது யார் என்ற செய்திகள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன

இந்த நிலையில் சமீபத்தில் ’அசுரன்’ படத்தை சிறப்பாக இயக்கியதற்காக தேசிய விருது பெற்ற இயக்குனர் வெற்றிமாறன், நான் விஜய்யை வைத்து விரைவில் படம் இயக்க உள்ளேன் என்று உறுதியாக கூறியுள்ளார்

தற்போது சூரி நடிக்கும் படத்தை இயக்குனர் வெற்றிமாறன் இயக்கி வருகிறார் என்பதும் அதன் பின் சூர்யாவின் ’வாடிவாசல்’ படத்தை இயக்க உள்ளார் என்பதும் தெரிந்ததே. இந்த இரண்டு படங்களையும் இயக்கி முடித்த பின்னர் விஜய் படத்தை இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.