close
Choose your channels

அஜித் படம் போனால் என்ன? விக்னேஷ் சிவன் - நயன்தாராவின் மாஸ் திட்டம்!

Friday, February 10, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் நடிக்கும் 62 வது திரைப்படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்க இருந்த நிலையில் எதிர்பாராத சில காரணங்களால் அந்த படத்தில் இருந்து அவர் விலகி விட்டதாக செய்திகள் வெளியாகின. இந்த நிலையில் தற்போது ’அஜித் 62’ படத்தை மகிழ் திருமேனி இயக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ’அஜித் 62’ படத்தில் இருந்து விலகிய விக்னேஷ் சிவன் தனது திறமையை மீண்டும் நிரூபிக்கும் வகையில் ஒரு வித்தியாசமான திரைப்படத்தை எடுக்க இருப்பதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே நயன்தாரா நடித்த கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட படங்களான ’அறம்’, ‘மாயா’ உள்பட ஒரு சில படங்கள் சூப்பர் ஹிட் ஆகிய நிலையில் மீண்டும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள ஒரு கதையை விக்னேஷ் சிவன் தயார் செய்து வருவதாகவும், இந்த படத்தில் நயன்தாராவே முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த படத்தின் அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என்றும் நயன்தாரா, விக்னேஷ் சிவனின் ‘ரெளடி பிக்சர்ஸ் நிறுவனமே இந்த படத்தை தயாரிக்கும் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.