close
Choose your channels

நீ பக்கத்தில் இருக்கும் நாட்கள் அற்புதமானது: நயனுக்கு விக்னேஷ் சிவன் நன்றி

Thursday, September 19, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது பிறந்த நாளை சமீபத்தில் கொண்டாடிய நிலையில் அவருக்கு நடிகை நயன்தாரா தனது பிறந்த நாள் வாழ்த்துக்களை கூறியதோடு, பிறந்த நாள் விழாவிலும் கலந்து கொண்டார். நயனுடன் அவரது நெருங்கிய நண்பர்களும் இந்த விழாவில் கலந்து கொண்டு விக்னேஷ் சிவனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

மேலும் பல திரையுலக பிரபலங்கள் தங்கள் சமூக வலைத்தள பக்கத்தில் விக்னேஷ் சிவனுக்கு வாழ்த்து தெரிவித்தனர் என்பது தெரிந்ததே. விக்னேஷ் சிவனின் பிறந்த நாள் விழா குறித்த புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. குறிப்பாக விக்னேஷ் சிவனும் நயன்தாராவுடன் இருந்த புகைப்படங்கள் பெரும் வரவேற்பை பெற்றன

இந்த நிலையில் தனது பிறந்த நாளில் வாழ்த்து கூறிய அனைவருக்கும் நன்றி கூறியுள்ள விக்னேஷ் சிவன் நயன்தாராவுக்கு ஸ்பெஷல் நன்றியை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் “நீ பக்கத்தில் இருக்கும்போது எல்லா நாட்களும் அற்புதமானதே. இனிமையான பிறந்த நாள் கொண்டாட்டத்துக்கு நன்றி என் தங்கமே. ஆசீர்வதிக்கப்பட்ட பிறந்த நாளில் என்னுடன் இருந்த அனைத்து அன்பார்ந்த நண்பர்களுக்கும் நன்றி’ என கூறி உள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.