close
Choose your channels

வயசு ஆக ஆக.. உலக மகளிர் தினத்தில் நயனை வர்ணித்த  விக்னேஷ் சிவன்..!

Friday, March 8, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8ஆம் தேதி உலக மகளிர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இன்று உலகம் முழுவதும் மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக தமிழ் திரை உலக பிரபலங்கள் தங்களது சமூக வலைதளங்களில் மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது மனைவி நயன்தாராவுக்கு மகளிர் தின வாழ்த்துக்களை கூறி அவரை வர்ணித்து செய்த பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

அந்த பதிவில் ’வயசாக வயசாக மெருகேறி கொண்டே இருக்கும் ரெண்டே விஷயம்.. உலக மகளிர் தின வாழ்த்துக்கள் நயன்தாரா, என் அழகிய அன்பான தங்கப்பெண்’ என்று பதிவு செய்துள்ளார்.

இந்த பதிவில் அவர் நயன்தாராவின் க்யூட் புகைப்படங்களையும் விக்னேஷ் சிவன் பதிவு செய்து உள்ள நிலையில் அந்த புகைப்படங்களுக்.கு லைக்ஸ், கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.