close
Choose your channels

விஜய் ஆண்டனியின் 'காளி' படம் குறித்த முக்கிய அப்டேட்

Tuesday, January 30, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் ஆண்டனி நடிப்பில் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் உருவாகி வந்த 'காளி' திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது. த்ரில் மற்றும் சஸ்பென்ஸ் கதையம்சம் கொண்ட இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இந்த தகவலை விஜய் ஆண்டனி மற்றும் கிருத்திகா உதயநிதி ஆகிய இருவரும் தங்களது சமூக வலைத்தளங்களில் உறுதி செய்துள்ளனர்.

'காளி' படத்தின் படப்பிடிப்பு முடிவுக்கு வந்துள்ளதை அடுத்து விரைவில் டப்பிங் உள்பட போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது

விஜய் ஆண்டனி ஹீரோவாக நடிப்பதோடு இசையமைத்து  தயாரித்துள்ள இந்த படத்தில் அஞ்சலி, சுனைனா, அம்ரிதா, ஷில்பா மஞ்சுநாத் என நான்கு ஹீரோயின்கள் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தில் ஆர்.கே.சுரேஷ் முக்கிய கேரக்டர் ஒன்றில் நடித்துள்ளார்.  ரிச்சர்ட் நாதன் ஒளிப்பதிவில், லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படம் வரும் மார்ச் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.