close
Choose your channels

2021ல் நாங்க தான் இருக்கணும்: விஜய் ரசிகர்கள் போஸ்டரால் பரபரப்பு

Friday, January 17, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் வெளியான தளபதி விஜய்யின் ’மாஸ்டர்’ திரைப்படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த போஸ்டரை வைத்து விஜய் ரசிகர்கள் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அந்த போஸ்டரில் ’234 தொகுதியும் சைலண்டா இருக்கணும், 2021ல் நாங்க தான் இருக்கணும், மக்கள் பணி செய்ய வரும் மாஸ்டர்’ என குறிப்பிடப்பட்டுள்ளதால் தமிழக அரசியல் களத்தில் விஜய் அல்லது விஜய் ரசிகர்கள் இறங்குவார்களா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

2021 ஆம் ஆண்டு தமிழகத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த போஸ்டர் பல்வேறு யூகங்களை எழுப்பி உள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் விஜய் ரசிகர்கள் சிலர் ஆர்வத்தில் இந்த போஸ்டரை வெளியிட்டு இருப்பார்கள் என்றும் விஜய்க்கு இப்போதைக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் எதுவும் இல்லை என்றும் கூறப்படுகிறது.

இருப்பினும் இந்த மாஸ்டர் படத்தின் செகண்ட் லுக் போஸ்டரில் வாயில் கையை வைத்தபடி விஜய் சைலண்ட்டாக இருக்க சொல்லும் ஸ்டில்லும், ரசிகர்களின் போஸ்டரில் உள்ள வாசகங்களும் பொருத்தமாக இருப்பதை பார்த்து விஜய் ரசிகர்கள் ரசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.