close
Choose your channels

விஜய்யின் ராசியான நடிகை வில்லியா? 'தளபதி 67ல் லோகேஷின் திட்டம் தான் என்ன?

Monday, July 18, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய்யின் ராசியான நடிகை என்று கூறப்படும் பிரபல நடிகை ’தளபதி 67’ படத்தில் வில்லியாக நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் லோகேஷ் கனகராஜ் திட்டம்தான் என்ன? என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் எழுந்துள்ளது.

தளபதி விஜய் நடித்த ’தெறி’ ’மெர்சல்’ மற்றும் ’கத்’தி ஆகிய படங்களில் நாயகியாக நடித்தவர் நடிகை சமந்தா. விஜய்யுடன் சமந்தா நடித்த மூன்று படங்களும் சூப்பர் ஹிட் என்பதும் விஜய்யின் ராசியான நடிகை என்ற பெயர் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’தளபதி 67’ படத்தை இயக்க இருக்கும் லோகேஷ் கனகராஜ் சமந்தாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்பட்டது. இதனால் விஜய் ஜோடியாக சமந்தா நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது வந்திருக்கும் தகவலின்படி சமந்தா இந்த படத்தில் வில்லியாக, விஜய்க்கு சவால்விடும் கேரக்டரில் நடிக்க இருப்பதாக கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பொதுவாக லோகேஷ் கனகராஜ் படங்களில் வில்லன் கேரக்டர் ஹீரோவுக்கு இணையாக இருக்கும் என்பதை ’மாஸ்டர்’ மற்றும் ’விக்ரம்’ படத்தில் இருந்து தெரிந்துகொண்டோம். அந்த வகையில் தளபதி விஜய் நடிக்கும் ‘தளபதி 67’ படத்தில் சமந்தா வில்லியாக நடித்தால் அவருக்கும் வலிமையான கேரக்டராகத்தான் இருக்கும் என்றும் இதன் மூலம் லோகேஷ் கனகராஜ் சமந்தாவின் இன்னொரு நடிப்பு பரிமாணத்தை வெளியே கொண்டு வருவார் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.