close
Choose your channels

தளபதி 66: விஜய்யின் சகோதரர் கேரக்டரில் விஜய்யின் நண்பர்?

Saturday, April 23, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்து வரும் ’தளபதி 66’ திரைப்படத்தில் விஜய்யின் சகோதரராக நடிக்கும் நடிகர் குறித்த தகவல் தற்போது கசிந்துள்ளது.

தளபதி விஜய் நடிப்பில், வம்சி இயக்கத்தில், தில் ராஜூ தயாரிப்பில், தமன் இசையில் உருவாகி வரும் திரைப்படம் ’தளபதி 66’. இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் முடிவடைந்ததை அடுத்து, அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக செட் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் ’தளபதி 66’ திரைப்படத்தில் விஜய்யின் தந்தையாக சரத்குமாரும் சகோதரர்களாக 90களில் பிரபலமான இரண்டு ஹீரோக்களும் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. முதற்கட்டமாக இந்த படத்தில் விஜய்யின் சகோதரராக மோகன் நடிக்க இருப்பதாக தகவல் வெளிவந்ததை அடுத்து தான் இந்த படத்தில் நடிக்கவில்லை என்பதை மோகன் உறுதி செய்தார்.

இதனை அடுத்து தற்போது 2000ஆம் ஆண்டுகளில் பிரபலமாக இருந்த மற்றொரு ஹீரோ ஷாம் இந்த படத்தில் விஜய்யின் சகோதரராக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ஷாம் 12பி, இயற்கை, தில்லாலங்கடி, உள்பட பல படங்களில் நடித்துள்ளார் என்பதும், விஜய் நடித்த ‘குஷி’ படத்தில் விஜய்யின் நண்பர்களில் ஒருவராக நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழுவினர் விரைவில் அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.