close
Choose your channels

கடலில் மீனாக இருந்தவள் நான்: விஜய் பட நாயகி

Wednesday, November 24, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் பிரபல நடிகை கடலில் நீந்தும் புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படத்திற்கு லைக்ஸ் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தளபதி விஜய் நடித்து வரும் ‘பீஸ்ட்’ படத்தின் நாயகியாக நடித்தவர் பூஜா ஹெக்டே என்பதும் இவர் விஜய் உடன் மட்டுமின்றி பிரபாஸ், சிரஞ்சீவி உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இருக்கும் பூஜாவுக்கு 16 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் உள்ளனர் என்பதும் அவரது ஒவ்வொரு பதிவிற்கும் லட்சக்கணக்கில் லைக்ஸ் குவியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்று முன்னர் அவர் பதிவு செய்துள்ள புகைப்படத்தில் கடலுக்குள் மீன்களுடன் சேர்ந்து நீச்சலடிக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். கடலில் மீனாக இருந்தவள் நான் என்று கூறும் வகையில் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த புகைப்படத்திற்கு 5 லட்சத்துக்கும் அதிகமான லைக்ஸ் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.