close
Choose your channels

சர்கார் இசை வெளியீடு தேதி குறித்த தகவல்

Friday, August 24, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் 'சர்கார்' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. அடுத்த மாதத்திற்குள் மொத்த படப்பிடிப்பும் முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் வரும் விநாயகர் சதுர்த்தி தினத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் வரும் அக்டோபர் 2ஆம் தேதி 'சர்கார்' படத்தின் பாடல்கள் வெளியாக வாய்ப்பு இருப்பதாக படக்குழுவினர்களுக்கு நெருக்கமானவர்களிடம் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது. இதுகுறித்த முறையான அறிவிப்பு சன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் இருந்து மிக விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

ஏற்கனவே விஜய்-ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் வெளியான 'மெர்சல்' படத்தில் பாடல்கள் அனைத்தும் மெர்சலான நிலையில் 'சர்கார்' படத்தின் பாடல்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. குறிப்பாக விஜய்யின் அறிமுக பாடல் பெரும் வரவேற்பை பெரும் என்று எதிர்பார்க்கபப்டுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.